ஆணவத்தில் ஆடிய வைகைப்புயல்!! ஷூட்டிங்கில் இருந்து துரத்திவிட்ட இயக்குனரால் அதிர்ச்சியான வடிவேலு..
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வந்த வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையால் ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் நடிக்க தடை போடப்பட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
அதில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அது ஒருபக்கம் இருக்க வடிவேலு ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகத்தில் இயக்குனர் வாசு இயக்கத்தில் நடித்தும் வருகிறார்.
ராகவா லாரன்ஸ், ராதிகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வடிவேலு மோசமாக நடந்து கொள்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
படத்தின் ஷூட்டிங் கால்ஷீட் டைம் 9 மணியாம். ஆனால் வடிவேலு 10 மணி, 11 மணி, 12 மணி என்று கூறி 12 மணிக்கு மேல் தான் ஷூடிங்கிற்கே வருகிறாராம். ஒரு சமயம் அவரது போனை ஸ்விச் ஆஃப் செய்தும் விடுகிறாராம்.
இப்படி வந்த வாய்ப்பையும் இப்படி தலைக்கனத்தில் செயல்படுகிறாரே என்று இயக்குனர் உட்பட பலர் கோபத்தில் இருக்கிறார்களாம். இதனால் இயக்குனர் படத்தின் வடிவேலு காட்சிகளை பலவற்றை தூக்கிவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் வடிவேலு காட்சியை நீக்கப்பட்டதை தொடர்ந்து நேரடியாக கோபப்பட்டு மூஞ்சை காட்டியிருக்கிறார் இயக்குனர் வாசு. சீன் முடியாமல் போக வேண்டும் என்று கூறிய வடிவேலுவை, இயக்குனர் கையசைத்து போங்க போங்க என்று போகச்சொல்லி அசிங்கப்படுத்தியிருக்கிறாராம்.
இந்த விசயத்தை பல விதமாக வெளியில் பலரிடம் கூறி வருகிறாராம் வடிவேலு. இதனால் படப்பிடிப்பில் சற்று மோசமான சூழ்நிலை நடைபெற்று வருகிறது.