இயக்குனர் அட்லீ இப்படிப்பட்டவர் தானா.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த விஷயம்
Atlee Kumar
By Kathick
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக இடம்பிடித்துள்ளார் அட்லீ.
ராஜா ராணி வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்த அட்லீ, தேறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். இதன்பின் பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி, மாபெரும் வெற்றியடைந்தார்.
ஒரு வெற்றி இயக்குனராக மட்டுமே நமக்கு அட்லீயை தெரியும். ஆனால், அவரை பற்றி பலருக்கும் தெரியாத முக்கிய விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்துள்ளார். அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
இயக்குனர் அட்லீ தனது உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் சொந்தமாக ஃபிளாட் வாங்கி கொடுத்துள்ளாராம். இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.