காப்பியடித்து காப்பியடித்தே இத்தனை கோடிகள் சொத்து சேர்த்துட்டாரா அட்லீ, அதிரும் திரையுலகம்
அட்லீ இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராகிவிட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் இது தான் நிதர்சனம்.
அட்லீ இயக்கிய ஜவான் படம் உலகம் முழுவதும் ரூ 1100 கோடிகள் வசூல் செய்து அட்லீயை பிரமாண்ட உயரத்தில் உட்கார வைத்துள்ளது.
இந்நிலையில் அட்லீ அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வரவுள்ளதாம்.
மேலும், அட்லீ தற்போதெல்லாம் தமிழ்நாடு பக்கம் வருவதே இல்லையாம், மும்பையிலேயே ஒரு பிரமாண்ட ஆபிஸ் போட்டு அங்கே செட்டில் ஆகிவிட்டாராம்.
அட்லீ என்ன தான் பெரிய பெரிய ஹிட் கொடுத்தாலும், அவருடைய படங்களின் காட்சிகள் பல படங்களின் காப்பி என்பதை தவிர்க்க முடியாது.
அதிலும் சமீபத்தில் வந்த ஜவான் அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் கதையை அப்படியே உருவி எடுத்துள்ளது தெரிய வந்தது.
ஆனாலும், பாக்ஸ் ஆபிஸ் படம் பட்டையை கிளப்ப இவர் அடித்த காப்பியெல்லாம் ரசிகர்கள் மறந்துவிட்டனர்.
சரி இது ஒரு புறம் இருக்க, இன்று இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனராக அட்லீ வளர்ந்துவிட்டார், சுமார் 30 கோடிகள் வரை அட்லீ சம்பளம் வாங்கி வருகின்றார்.
இவரின் சொத்து மதிப்பு ரூ 60 கோடிகள் வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது. அதற்கு மேல் இருந்தாலும் ஆச்சரியமில்லை தான்.