காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்று இல்லை!! இயக்குநர் சேரன் பேச்சு..
Cheran
Tamil Directors
By Edward
இயக்குநர் சேரன்
தமிழ் சினிமாவில் மிகச்சிறப்பான படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் சேரன், தான் இயக்கிய ஆட்டோகிராஃப் படம் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்ததை அடுத்து கடந்த மாதம் அப்படத்தினை ரீ-ரிலீஸ் செய்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன், காதல் பற்றி சில விஷயத்தை பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நல்ல காதல், கள்ளக்காதல்
அதில், சமூகத்தில் ஒரு பெண்ணத்தான் காதலிக்க வேண்டும் என்று இல்லை, நாம் எந்த ஒரு உயிரின் மேல் அன்பு வைத்தாலும் அது காதல்தான். காதலில் நல்லக்காதல், கள்ளக்காதல் என்று இல்லை.
எனவே அனைவரும் வாழ்க்கையின் சுமைகளை விட்டுவிட்டு யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை காதலித்து விடுங்கள் என்று சேரன் பேசியிருக்கிறார்.