சினிமாவால் திருமண வாழ்க்கையை இழந்த இயக்குனர் மிஸ்கின்! விவாகரத்துக்கு இதுதான் காரணமாம்?

Tamil Cinema Mysskin
3 நாட்கள் முன்
Edward

Edward

பேய் படங்கள் அந்த காலத்தில் இருந்தே தனித்துவமான வரவேற்பு பெறுவது வழக்கம் தான். ஆனால் தற்போதைய இயக்குனர்கள் பலவிதத்தில் பேயை வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள். அதில் பேய் என்றால் இப்படியும் இருக்கும் என்று காட்சிப்படுத்தி வருபவர் இயக்குனர் மிஸ்கின்.

ஆரம்ப சினிமா படங்கள்:-

2006ல் சித்திரம் பேசுதடி என்ற திரில்லர் படத்தினை எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அதன்பின் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கண்டார்.

தற்போது ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கூடிய சீக்கிரம் வெளியாகவுள்ளது பிசாசு2 படம். படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

காதல் திருமணம்:-

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மிஸ்கினின் திருமண வாழ்க்கை விவாகரத்து பற்றி பல ஆண்டுகள் கழித்து கூறியுள்ளார். காதலித்து வந்த போது வீட்டிற்கு தெரியாமல் ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்ட மிஸ்கின், ஏன் அவரை பிரிந்தேன் என்ற காரணமே தெரியவில்லை. எனக்கு போர் அடித்துவிட்டதா இல்லை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இதை சொன்னால் பெண்கள் என்னை திட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

விவாகரத்துக்கு காரணம்:-

மேலும், சினிமா பக்கமே நான் இருந்ததால் என் குடும்பத்துடனும் மனைவியுடனும் நான் நேரத்தினை ஒதுக்கவில்லை. கல்யாணத்திற்கு முன் 10 வருடங்களாக ஒருத்தரை காதலித்தேன் சில காராணங்கள் அவருன் என்னை விட்டு சென்றார். அதன்பின் என் மகளை அன்பு செய்ய ஆரம்பித்தேன்.

சில நாட்களுக்கு பிறகு என் மனைவியிடன் விவாகரத்து வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டு பின் சமரசத்துடன் இருவரும் பிரிந்துவிட்டோம். என் மகளை அவருடன் அனுப்பி வைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இப்படியொரு மனிதன் வாழ்க்கையில் கஷ்டத்தினை வெளிக்காட்டாமல் சினிமாவே வாழ்க்கையாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.