மகளுடன் சேர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு ரூட்டை போட்ட பிரம்மாண்ட இயக்குனர்! 15 வருட பயணமாச்சே..

Rajinikanth Shankar Shanmugam Aditi Shankar
By Edward Jun 16, 2022 01:52 AM GMT
Edward

Edward

Report

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்கள் லிஸ்ட்டில் இருப்பவர் இயக்குனர் சங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுக அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்த இயக்குனர் சங்கர்.

இவர் இயக்கத்தில், முதல்வன், பாய்ஸ் படங்களை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முதல் படமாக சிவாஜி தி பாஸ் படத்தினை இயக்கினார். படம் வெளியாகி பல கோடி வசூலை பெற்று சில்வர் ஜூப்லி படமாக சங்கர்- ரஜினிக்கு அமைந்தது.

இப்படத்தினை எப்போது பார்த்தாலும் ரஜினி ரசிகர்களை தாண்டி பலர் பார்த்து ரசிப்பதுண்டு. இந்நிலையில் இப்படம் வெளியாக 15 ஆண்டுகளை கடந்த நிலையில் ஏவிஎம் நிறுவனம் இப்படத்தில் பார்த்திராத புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தது.

தற்போது படத்தின் இயக்குனர் சங்கர் சூப்பர் ரஜினிகாந்தை தன் மகள் அதிதி சங்கருடன் சேர்ந்து சந்தித்து பேசியுள்ளார். எப்படியாவது தம் மகளை சினிமாத்துறையில் நல்ல ஒரு இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசை சங்கருக்கு இருக்கிறது. அப்படி சங்கர் ரஜினிகாந்த் மூலம் படங்களின் வாய்ப்பினை எடுக்க முயற்சி செய்துள்ளார்.