தலைக்கனத்தில் ஆடும் கீர்த்தி சுரேஷால் கோபத்தில் சுதா கொங்கரா!! இப்படியொரு சோதனையை சந்தித்த தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகவும் குறுகிய காலத்தில் முன்னணி இடத்தையும் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஆனால் அவர் நடித்த பல படங்கள் தோல்வியை கொடுத்ததோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் தங்கையாக நடித்து மார்க்கெட்டையும் இழந்தார். அதன்பின் தமிழில் ஒருசில படங்களில் கமிட்டாகி வந்த கீர்த்தி தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படியிருக்கையில் கேஜிஎஃப் மற்றும் காந்தாரா படத்தினை தயாரித்த கொம்பாலையா பிலிம்ஸ் தயாரிப்பில் ரகு தாத்தா என்ற படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட்டாகினார். சுமன் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முதற்கட்டப்படப்பிடிப்பு முடிந்துள்ளது. ரகு தாத்தா படத்தில் இயக்குனர் சுதா கங்கராவும்எக்ஸிகியூட்டிவ் பிரொடியூசராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனருக்கும் கீர்த்தி சுரேஷிற்கும் இடையில் பிரச்சனை ஆரம்பித்து மனக்கசப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதன்பின் முதல் செடியூலுக்கு கால்ஷீட் கொடுத்த கீர்த்தி சுரேஷ் இரண்டாம் செடியூலுக்கு கால்ஷீட் கொடுக்காமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை அலையவிட்டுள்ளார். இதையும் தாண்டி கீர்த்தி சுரேஷிடம் படக்குழுவினர் கேட்ட போது பல காரணங்களை கூறியிருக்கிறார்.
இதனால் சுதா கொங்கரா கீர்த்தி சுரேஷ் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதைவிட மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வரும் கொம்பாலையா தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய வருத்தத்தில் புலம்பி வருகிறதாம். கீர்த்தி சுரேஷின் இந்த தலைக்கனத்தை பலர் விமர்சித்து வருகிறார்கள். அவர் நடிப்பில் தசரா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரமோஷன் வேலைகளில் கீர்த்தி சுரேஷ் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.