மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்!! தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் உள்ள மாவட்டங்கள் எது தெரியுமா?

Tamil nadu Chennai TASMAC Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Jai May 12, 2026 08:30 AM GMT
Report

தமிழ் நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில் பல விஷயங்களில் அதிரடி முடிவெடுத்து வருகிறார். அந்தவகையில், முக்கிய இடங்களில் இருக்கும் மதுபான கடைகள் 717ஐ 2 வாரங்களில் மூட உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய்.

மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்!! தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் உள்ள மாவட்டங்கள் எது தெரியுமா? | Districts With Highest Number Of Tasmac Tamilnadu

இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 4765 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. அதில் அதிக மதுக்கடைகள் உள்ள மாவட்டங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக டாஸ்மாக் உள்ள மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் கடைகள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் மதுரை 6வது இடத்தில் இருக்கிறது. சுமார் 250 - 300 டாஸ்மாக் கடைகள் உள்ளது என கூறப்படுகிறது. இந்த பட்டியலில் 200 - 250 டாஸ்மாக் கடைகளுடன் திருப்பூர் மாவட்டம் 5வது இடத்தில் இருக்கிறது.

இதனையடுத்து கோயம்புத்தூர் மாவட்டம் சுமார் 300 - 350 டாஸ்மாக் கடைகளுடன் 4வது இடத்திலும், சுமார் 250 - 300 டாஸ்மாக் கடைகளுடன் திருவள்ளூர் மாவட்டம் 3வது இடத்திலும் இருக்கிறது.

மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்!! தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் உள்ள மாவட்டங்கள் எது தெரியுமா? | Districts With Highest Number Of Tasmac Tamilnadu

முதல் இரு இடம்

தமிழ்நாட்டில் அதிக டாஸ்மாக் கடைகள் உள்ள மாவட்டங்களில் 2வது இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் இருக்கிறது. 200 - 250 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியாக அதிக டாஸ்மாக் கடைகள் உள்ள மாவட்டங்களில் சென்னை மாவட்டம் முதல் இடத்தில் இருக்கிறது. இங்கு சுமார் 350 முதல் 400 டாஸ்மாக் கடைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டும் தென் மாவட்டங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ. 44,000 கோடி ரூபாய்க்கும் மேல் டாஸ்மாக் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.