பல கோடிகள் வசூல் செய்தும் பெரிய லாபம் இல்லையா ராமாயணா
Box office
Ramayana
By Tony
ராமாயணா இந்திய சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக தஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற உலகம் முழுவதும் ரூ. 1600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதிலும் வெளிநாடுகளில் மட்டுமே இப்படம் ரூ. 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

இந்நிலையில் ராமயண படம் உலகம் முழுவதும் ப்ரேக் ஈவன் ரூ. 2000 கோடி என கூறப்படுகிறது, இதை வைத்து பார்க்கையில் இப்படம் இன்னும் ரூ. 400 கோடி வசூல் செய்தால் தான் ப்ரேக் ஈவன் ஆகும் என கூறப்படுகிறது.
இது வைத்து பார்க்கையில் இரண்டு பாகங்கள் சேர்த்து தான் ராமயணா லாபக்கணக்கை எட்டும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.