சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! அப்பாவுக்கு வேலை போய்டிச்சி.. கஷ்டத்தை உணர்ந்து திவினேஷ் செய்த செயல்..
சரிகமப லிட்டில் சாப்ஸ் 4
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் 5வது இறுதி போட்டியாளர் யார் என்பதற்கான தேர்வு போட்டிகள் நடைபெற்றது. அப்படி பாடிய குழந்தைகளில் சிறப்பாக பாடி அபினேஷ் தான் 5வது இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் இறுதி சுற்று போட்டி விரைவில் நடக்கவுள்ளது.
திவினேஷ்
இந்நிலையில் கடந்த வாரம் நடந்த எபிசோட்டில் பாடி திவினேஷிடம் தொகுப்பாளினி அர்ச்சனா, உனக்கு என்ன ஆசை என்று கேட்டுள்ளார். அதற்கு திவினேஷ், என் அப்பாவுக்கு ஒரு வண்டி வாங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதனை கேட்ட அனைவரும் ஷாக்காக, திவினேஷின் அம்மா என்ன வண்டி, எதற்கு என்று கூறியிருக்கிறார். அதன்பின் பாடகர் ஸ்ரீநினிவாசன் 6 லட்சம் ஆகும் அந்த வண்டிக்கு நான் முதலில் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.