அந்தமாதிரி தொல்லை எனக்கும் நடந்திருக்கு? சூர்யா பட நடிகை திவ்யா
சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்களாக இருந்து பின் வெள்ளித்திரையில் சிறு கதாபாத்திரம் மூலம் நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் சேர்ந்து இருப்பவர் நடிகை திவ்யா துரைசாமி. பிரபல தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
அதன்பின் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வாய்ப்பு கிடைத்து அப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். திவ்யா பற்றி சூர்யா பெருமையுடன் பேசியது பற்றியும் சினிமா அனுபவங்கள் பற்றியும் சமீபத்தில் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அப்போது எல்லா பெண்களும் ஏதோ ஒரு வகையில் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சார்பில் எடுத்து சொல்கிற படம் தான் இது. அதுமட்டும் இல்லாமல் பாலியல் ரீதியான பிரச்சினைகளை நானும் சந்தித்து இருக்கிறேன்.
ஆனால், அதை தைரியமாக கடந்தும் வந்து இருக்கேன். யாரெல்லாம் நமக்கு நடக்கிற அத்துமீறல்களை வாய் விட்டுச் சொல்லாமல் இருக்கிறார்களோ? அவர்கள் மீது தான் மேலும் மேலும் அத்துமீறல்கள் நடக்கிறது என்கிறார் திவ்யா துரைசாமி.