அவதூறாக பேசிய பயில்வானுக்கு நீதிமன்ற பூட்டை போட்ட சத்யராஜ் மகள் திவ்யா..

Sathyaraj Gossip Today Bayilvan Ranganathan Divya Sathyaraj
By Jai Sep 25, 2026 03:30 PM GMT
Report

திவ்யா சத்யராஜ்

சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்திய வீடியோ ஒன்றில், கணவன் - மனைவி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உண்மையாக விரும்பி சேர்ந்து வாழணும். கல்யாணம் ஆகிடுச்சுங்கிற ஒரே காரணத்துக்காக சேர்ந்து வாழக் கூடாது.

மதம், ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவதிலும் தனக்கு இஷ்டம் இல்லை என்று கூறியிருந்தார். இதனை ஒருசிலர் விமர்சித்த நிலையில், பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

அவதூறாக பேசிய பயில்வானுக்கு நீதிமன்ற பூட்டை போட்ட சத்யராஜ் மகள் திவ்யா.. | Divya Files 1 Crore Defamation Suit To Bayilvan

பயில்வான் மீது வழக்கு

தன்னைப்பற்றி பொய்யான, அவதூறான கருத்தை பரப்பியதாக கூறி நீதிமன்றத்துக்கு சென்று புகாரும் அளித்தார் திவ்யா. இதனால் தனக்கு மன உளைச்சலும், நற்பெயருக்கு பாதிப்பும் ஏற்பட்டதாக கூறி, பயில்வான் மற்றும் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் முகைதீன் ஆகிய இருவரும் சேர்ந்து ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் திவ்யா.

மேலும் வழக்கு தொடர்ந்த நாள் முதல், நஷ்டஈடு தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

அவதூறாக பேசிய பயில்வானுக்கு நீதிமன்ற பூட்டை போட்ட சத்யராஜ் மகள் திவ்யா.. | Divya Files 1 Crore Defamation Suit To Bayilvan

அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் தன்னைபற்றி அவதூறான கருத்தை பேசுவது, எழுதுவது, வெளியிடுவது, ஒளிபரப்புவது என்ற பயில்வான் ரங்கநாதனுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இவ்வழக்கை விசாரிதத நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, வழக்கு முடியும் வரை அவருக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துகளை பரப்புவதற்கு பயில்வான் ரங்கநாதனுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.