நீயா நாயா : கல்யாணம் பண்ண பயமா இருந்துச்சு..ஆனா!! பிக்பாஸ் நடிகை திவ்யா கணேசன்..
நீயா நாயா
விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் நீயா நாயா நிகழ்ச்சி. தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், கடந்த வாரம், திருமணம் செய்ய பயம் என்று சொல்லு இளைஞர்கள் - கல்யாணம் செய்யுங்கள் என்று சொல்லும் திருமணமானவர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேசன் கலந்து கொண்டு, திருமணம் குறித்த தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.

திவ்யா கணேசன்
அதில், எனக்கு இரண்டு அக்கா, அவர்கள் வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவர்கள் என்னிடம் கல்யாணம் மட்டும் பண்ணாதே, அது ரொம்ப கஷ்டம் என்று சொல்வார்கள். அதனால் எனக்கும் ஒரு கட்டத்தில் கல்யாணம் என்றாலே பயமா இருந்தது.
நான் தனியாக எங்காவது போகணும் என்றால் ரொம்பவும் யோசிப்பேன். அந்த இடம் எப்படி இருக்கும், நான் எப்படி நடந்துக்கணும் என்ன செய்வேன் என்ற கேள்விகள் இருக்கும். அதே இடத்துக்கு என் அப்பாவுடன் சென்றால், எந்த தயக்கமும் இருக்காது. ஜாலியாக போய் சந்தோஷமாக திரும்பிவிடுவேன்.
அதேபோல், வாழ்க்கையில் ஒரு துணை இருந்தால், அவர் மேல் நம்பிக்கை இருந்தால், வாழ்க்கையே லைட்டாக மாறிவிடும். அதனால் தான் இப்போது கல்யாணம் பண்ணிக்கணும் என்ற எண்ணம் எனக்குள் வந்திருக்கு என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் திவ்யா கணேசன்.