திமுக - தவெக கட்சிகளால் சத்யராஜ் மகள் - மகனுக்குள் சண்டையா? திவ்யா கொடுத்த பதிலடி..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சியை தொடங்கி வரும் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ள நிலையில், விஜய் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

சிபிராஜ் - திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ், விஜய்க்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவளித்து வருகிறார். ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் தீவிர ஆதரவாளராக திகழ்ந்து மட்டுமில்லாமல் திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இதனால் நடிகர் விஜய்யின் அரசியலை திவ்யா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரே குடும்பத்திற்குள் இருவர் திமுகவுக்கும் தவெகவுக்கும் ஆதரவாக இருக்கும்போது குடும்பத்திற்குள் சண்டை வரவில்லையா? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் திவ்யா சத்யராஜிடன் கேட்டுள்ளார்.

சண்டையா?
அதற்கு அவர், எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்த இரண்டு பேர் என்றால் அது, ஒன்று என் அப்பா, மற்றொன்று என் சகோதரன் சிபிராஜ். இவர்கள் இருவரையும் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். சிபிராஜுக்கு நீலநிறம் பிடிக்கும் எனக்கு பிங்க் நிறம் பிடிக்கும். இந்த காரணத்திற்காக எங்கள் இருவருக்கும் ஒருபோதும் சண்டை வந்ததே இல்லை.
அப்படி பார்க்கையில், திமுக, தவெக என்ற சண்டையும் வந்ததில்லை. நாங்கள் மிகவும் முற்போக்கான குடும்பமாக இருக்கிறோம். நேற்று கூட நாங்கள் அனைவரும் இணைந்து பிரியாணி சாப்பிட வெளியில் சென்றோம், ஆனால் எங்களுக்குள் இதுதொடர்பாக எந்த சண்டையும் வர வாய்ப்பே இல்லை என்று பதிலளித்துள்ளார்.