கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கலாம் தவறே இல்லை!! சத்யராஜ் மகள் திவ்யா ஓபன் டாக்..

Sathyaraj Gossip Today Marriage
By Jai Apr 26, 2026 06:30 AM GMT
Report

திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். திமுக ஆதரவாளராக இருக்கும் திவ்யா, விஜய்யின் அரசியல் குறித்து விமர்சித்தும் வருகிறார். இந்நிலையில் திவ்யா சத்யராஜ் அளித்த பேட்டியொன்றில் திருமணம் குறித்து பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கலாம் தவறே இல்லை!! சத்யராஜ் மகள் திவ்யா ஓபன் டாக்.. | Divya Sathyaraj S Bold Take On Marriage Parenthood

அதில், என்னை பொறுத்தவரையில் இந்த நிறுவனமயமாக்கப்பட்ட திருமணத்தில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. மோதிரம் மாற்றிக்கொள்வது, தாலி கட்டிக்கொள்வது உள்ளிட்ட எந்த சடங்கு, சம்பிரதாயங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொள்வதற்கு ஒரே மதம், ஒரே ஜாதி என்று இருக்க வேண்டிய அவசியமில்லை.

நமக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் அவருடன் இணைந்து வாழலாம். அதற்கு திருமணம் செய்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு இருவரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

கல்யாணம் பண்ணாம

திருமணம் செய்து கொண்டுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ல்லாம் நான் ஏற்க மறுக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம், அப்படி யாராவது குழந்தை பெற்றுக்கொண்டால் அதை நான் மதிக்கமாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்காமல் இருவரும் தங்களது வீட்டில் வசித்துக்கொண்டே இணைந்து வாழ முடியும்.

கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கலாம் தவறே இல்லை!! சத்யராஜ் மகள் திவ்யா ஓபன் டாக்.. | Divya Sathyaraj S Bold Take On Marriage Parenthood

எனக்கு ஜாதகம் இல்லை என்பதை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன். அதேபோல் என் அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அவர் எனக்கு ஜாதகம் என்ற ஒன்றை எழுதவே இல்லை. அதேபோல் எனக்கும் அதன்மீது நம்பிக்கை கிடையாது. எனக்கும் அது தேவைப்படவில்லை, நான் அதை மிகவும் பெருமையாக சொல்வேன். என்னுடைய கடந்த காலங்களில் நானும் காதலித்திருக்கிறேன். காதல் முறிவும் ஏற்பட்டுள்ளது.

அதற்காக நான் என்னுடைய அப்பாவிடம் சென்று ராஜா ராணி படத்தில் நயன் தாரா மேடம் அழுவதுபோல் அழமாட்டேன். நான் தனியாக சென்று அழுது இருக்கிறேன். அதிலிருந்து நான் வெளிவந்தும் இருக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று என் அப்பாவிற்கு எந்த கவலையும் கிடையாது.

அவரைப் பொறுத்த வரையில் நான் நிம்மதியாக இருக்கிறேன், என்று நான் உணர்ந்தால், அது அவருக்கு மகிழ்ச்சி, இல்லை என்றால் நான் தனியாக இருந்தால் தான் எனக்கு நிம்மதி என்றால் அதையும் அவர் ஏற்றுக்கொள்வார் என்று திவ்யா சத்யராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.