கண் முன்பே வேற நடிகையுடன் இருந்தாரு.. கதறி அழுத கர்ப்பிணி நடிகை
கன்னட பெண்ணாக தமிழில் கேளடி கண்மணி சீரியல் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். 2017ல் இருந்து சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த திவ்யா ஏற்கனவே திருமணமாகி 5 வயது பெண் குழந்தை இருந்துள்ளது.
திருமணம்
கணவருடன் ஏற்பட்ட பிரிவால் தனிமையாக குழந்தையுடன் வாழ்ந்து வந்த திவ்யா சீரியல் நடிகர் அர்ணவ் என்பவருடன் 4 வருடங்களுக்கு மேல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழந்து வந்தார். இதனால் கர்ப்பமாகி இருந்த திவ்யாவை, அர்ணவ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து திருமணமான புகைப்படத்தை இணையத்தில் ஏன் வெளியிட்டாய் என்று கூறி அர்ணவ் தன்னை அடித்ததில் வயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் என்ன நடந்து என்று வீடியோ மூலம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அர்ணவ் தன் தரப்பில் எந்த தவறும் இல்லை என்றும் கர்ப்பத்தை கலைக்க திவ்யா நண்பர்களுடன் சேர்ந்து போடும் நாடகம் என்று கூறி கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

கள்ளத்தொடர்பில் கண்வர்
இந்நிலையில் திவ்யா மருத்துவமனையில் இருந்து வெளியேறி நேற்றிரவு பத்திரிக்கையாளர்களை சந்தித்து என்ன நடந்தது என்று கூறியுள்ளார். அதில், அர்ணவ் மற்றும் அவரதுகுடும்பத்தினர் இந்துவில் இருந்து முஸ்லிமில் மதமாற வேண்டும் என்று கூறினார்கள் அவர்கள் கட்டாயப்படுத்தியதால் முஸ்லிம்-க்கு மதமாறினேன்.
அதன்பின், ஜூன் 29 ஆம் தேதி பாரிஸில் முஸ்லிம் திருமணமும் காஞ்சிபுரத்தில் இந்துமுறைப்படியும் திருமணம் செய்து கொண்டோம். பின் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கல்யாணமான புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறினார் அர்ணவ்.
ஒருநாள் அர்ணவ் நடித்த சீரியலில் நடிக்கும் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் செய்தி கேள்விப்பட்டேன். உடனே ஷூட்டிங்கிற்கு சென்று கேரவனில் பார்த்த போது இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்துஷாக்காகினேன். என்ன இது என்று கேட்டதற்கு அந்த நடிகை என் வயிற்றில் வாட்டர் பாட்டிலை தூக்கி எறிந்தார் என தெரிவித்தார்.
இதன்பின் புகைப்படத்தை டெலிட் செய்ய கூறியும் விவாகரத்து செய்ய போகிறேன் என்று கூறினார்கள் அர்ணவ் என தெரிவித்தார்.