திமுக - தேமுதிக கூட்டணி!! தலைமறைவான வைகைப்புயல்!! பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அந்தந்த காட்சி தலைவர்கள், யாருடன் கூட்டணி சேரலாம் என்று யோசித்து கூட்டணி வைத்து வருகிறார்கள்.
இன்னும் சில மாதங்கள் மட்டும் இருப்பதால் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து இந்த தேர்தலில் விஜய் களம் காண்கிறார். விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
திமுக - தேமுதிக கூட்டணி
தேமுதிக கட்சி தவெகவுடன் கூட்டணி வைப்பார்கள் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அக்கட்சியோ திமுகவுடன் கூட்டணி வைத்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பழம் நழுவி பத்து வருடங்கள் கழித்து பாலில் விழுந்துவிட்டதில் இரண்டு கட்சியினரும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கூட்டணி அமைந்ததில் இருந்து நடிகர் வடிவேலுவை சோசியல் மீடியா பக்கம் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
ப்ளூ சட்டை மாறன்
அந்தவகையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக. அதிர்ச்சியடைந்த பிரபல காமெடி நடிகர் தலைமறைவு என்று குறிப்பிட்டு கலாய்த்துள்ளார்.
இதில் வடிவேலு பெயரை குறிப்பிடாவிட்டாலும் நெட்டிசன்கள் அந்த காமெடி நடிகர் வடிவேலு தானே என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர். 2011ல் சட்டப்பேரவை தேர்தலின்போது தேமுதிகவை எதிர்த்து திமுகவுக்கு ஆதரவளித்த வடிவேலு பேசி சிக்கலில் சிக்கினார். மேலும் விஜயகாந்தை படுமோசமாகவும் விமர்சித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.