பெண்களை இழிவுப்படுத்தி விமர்சித்த ஆ ராசா!! கண்டித்த திமுக தலைவர்..

Indian Union Muslim League Thol. Thirumavalavan DMK Gossip Today TVK
By Jai May 22, 2026 07:00 AM GMT
Report

ஆ ராசா

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியும் இன்னும் பரபரப்பும் ஓயவில்லை. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது. விசிக, ஐயூஎம்எல் கட்சியும் தவெக அமைச்சரவையில் இடம் பிடிக்க, திமுகவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா வைத்த விமர்சனம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்களை இழிவுப்படுத்தி விமர்சித்த ஆ ராசா!! கண்டித்த திமுக தலைவர்.. | Dmk Raja Dmk Raja Controversy Remarks On Vck Iuml

பூ முடித்தவனை புறந்தள்ளி

ஆ ராசா எக்ஸ் தள பதிவில், ”முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்' மூட சாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்' வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி - புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் 'காலதேச வர்த்தமான' த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!” என்று பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவு பெண்களை இழிவு செய்யும் விதமாக இருக்கிறது என்று கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆ ராசா அந்த பதிவை டெலீட் செய்துள்ளார். இருந்தாலும் விசிக, ஐயூஎம்எல் கட்சியினரின் கடும் கண்டனம் தற்போது வரை இருந்து வருகிறது.

பெண்களை இழிவுப்படுத்தி விமர்சித்த ஆ ராசா!! கண்டித்த திமுக தலைவர்.. | Dmk Raja Dmk Raja Controversy Remarks On Vck Iuml

முடத்தெங்கு

இதனையடுத்து அந்த பதிவினை டெலீட் செய்துவிட்டு, ”என் வீட்டு தோட்டத்துத் தென்னை கூனி எதிர் வீட்டுக்கு இளநீர் தந்தால் பெயர் என்ன..? முடத்தெங்கு’ அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்” என்ற புதிய பதிவினை பகிர்ந்துள்ளார் ஆ ராசா.

இந்நிலையில், இப்படியான சர்ச்சை பதிவுகளை நிறுத்துமாறு திமுக கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டானின் ஒரு பதிவினை பகிர்ந்து எச்சரித்துள்ளார்.

Gallery