படம் முழுக்க முறைத்துக்கொண்டே இருக்கும் விஜய்! டாக்டரை போல் தளபதி ஏமாற்றுவாரா?
உச்ச நட்சத்திரம் என்று கூறப்படும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய படம் பீஸ்ட். கடந்த பல மாதங்கள் காத்திருப்புக்கு இப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
உலக ரசிகர்களை மிரண்டு பார்க்கும் அளவிற்கு அப்படத்தின் பாடல்கள், பீஸ்ட் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது. படத்தின் பிரமோஷன் விஷயத்தில் நடிகர் விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற பேட்டியை நெல்சன் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அதன் முழு வீடியோ சன் தொலைக்காட்சியில் 10 ஆம் தேதி ஒளிப்பரப்பாகியது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய் முழுக்க முழுக்க சிரிக்காமல் நடித்துள்ளார் என்பது படத்தின் பிரமோ, டிரைலர் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனை எப்படி இயக்குனர் நெல்சன் மாறுபட்ட அளவில் நடிக்க வைத்திருந்தாரோ, அப்படியே பீஸ்ட் படத்திலும் விஜய்யை நடிக்க வைத்துள்ளாரா என்ற சந்தேகம் இருந்துள்ளது. விஜய் தவிர மற்றவர்களின் காமெடிகள் இப்படத்தில் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.
பிகில், மாஸ்டர் படத்தில் கூட எங்கேயாவது ரொமான்ஸ் காமேடி செட்டாகியிருக்கும் விஜய்க்கு. ஆனால் இப்படத்தில் விஜய் முற்றிலும் வேறுபட்ட இதுவரை நடித்திராத ரோலில் நடித்துள்ளார். இது நெல்சன் எடுத்த பேட்டியிலும் அப்பட்டமாக தெரிகிறது.