தொழிலதிபருடன் நடிகை ஜான்வி கபூருக்கு திருமணமா? போனி கபூர் சொன்ன விஷயம்

Janhvi Kapoor
By Karthick Raja May 06, 2026 02:30 AM GMT
Report

இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை நாம் அறிவோம். தனது அம்மா போலவே சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி, இன்று இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் பெத்தி என்கிற திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபருடன் நடிகை ஜான்வி கபூருக்கு திருமணமா? போனி கபூர் சொன்ன விஷயம் | Does Janhvi Kapoor Going To Marry A Business Man

ஜான்வி கபூர் கடந்த பல வருடங்களாகவே தொழிலதிபர் ஷிகர் பஹாரியா என்பவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாகவே வெளியில் வருவது அடிக்கடி வைரல் ஆகிறது.

இந்த நிலையில், விரைவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. அதற்கு ஜான்வியின் அப்பா தயாரிப்பாளர் போனி கபூர் பதில் கூறியுள்ளார், "இல்லை, அந்த செய்தி உண்மை இல்லை" என கூறி உள்ளார். இதன் மூலம் நடிகை ஜான்வி கபூரின் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.