எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை பற்றி தெரியாது..எனக்கு நடக்கவில்லை!! ஹன்சிகா ஓபன் டாக்..
ஹன்சிகா மோத்வானி
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்திருக்கிறது. 2022ல் சோஹைல் கட்டாரியாவை திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சமீபத்தில் 4 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை அடுத்து ஹன்சிகா, தற்போது சுதந்திரமாக, தனியாக இருப்பது நன்றாகவுள்ளது என்று கூறியிருந்தார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
இந்நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் காஸ்டிங் கவுச் கலாச்சார புகார்களை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், உண்மையாக உழைத்தால் இதுபோன்ற விஷயங்கள் நடக்கவே நடக்காது. எனக்கு அந்த மாதிரி நடக்கவில்லை, மற்றபடி சினிமாவில் இப்படியொரு பிரச்சனை உள்ளதா என்பது எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.
மேலும் நிறைய நடிகைகள் தரப்பில் இருந்து புகார்கள் வருவது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து என்னால் கருத்து கூற முடியாது, ஏனென்றால் எனக்கு தெரியாது என்று பதிலளித்துள்ளார்.