ரஜினி, விஜய், அஜித்க்கே டஃப் கொடுத்த டான் வசூல்! பேராசையில் கோடியில் புரளும் சிவகார்த்திகேயன்..
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய சிவகார்த்தி அதன்பின் எதிர்நீச்சல், ரஜினி முருகன், ரெமோ போன்ற வெற்றிப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
பின் ஒருசில பிளாப் படங்களை கொடுத்த சிவகார்த்தி டாக்டர் படம் மூலம் 100 கோடி வசூல் சாதனை படைத்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரானார். இப்படத்திற்கு பின் தனது சம்பளத்தினை 35 கோடியாக அதிகரித்து டான் படத்திற்கு அவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்.
இந்நிலையில் டான் படம் இதுவரையில் தியேட்டரில் வெளியாகி மொத்தம் 116 கோடி அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அடுத்த தெலுங்கு , தமிழ் பாணியில் உருவாகும் படத்திற்கு பின் தன்னுடைய சம்பளமாக 50 கோடி அளவில் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதாவது கதை கூறவரும் தயாரிப்பாளர்களிடம் என் சம்பளம் தவிர்த்து 50 கோடி செலவில் படத்தினை எடுக்க முடியுமா என்று ஒரேஒரு கேள்வியை மட்டும் கேட்டு ஓடவிட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். ஆசைப்படலாம் பேராசை பட்டால் எப்படி சிவா என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.