டான் படத்துக்கு வந்த சோதனை? க்ளைமேக்ஸ் சீனையே இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே

Samuthirakani Sivakarthikeyan Trending Videos S.J.Suryah Don
By Edward Jun 30, 2022 11:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து பெரிய இடத்திற்கு வந்த நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் சிபி இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, பிரியா அருள் மோகன், சிவாங்கி, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற படம் டான்.

100 கோடி வசூலுக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இப்படத்தில் க்ளைமேக்ஸில் அமைந்துள்ள அப்பா, மகன் செண்டிமெண்ட் காட்சிகள் மக்கள் மத்தியில் உருகவைத்து மிகப்பெரியளவில் ஈர்த்திருந்தது.

அந்தவகையில் அந்த காட்சியை வைத்து இணையத்தில் பலர் வாழ்க்கைக்கு தகுந்த மீம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அந்த காட்சியை வைத்து கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இறந்து கிடக்கும் அப்பாவின் கால் பாதம் உழைத்து தோல் வெடித்தது போல் இருப்பதை காட்டி இருப்பார்கள். இதை கால் பாதம் சரிசெய்யும் மருந்தி விளம்பரமாக எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.