பிறவியிலேயே அறிவாளியா பிறந்துட்டீங்களா!! தொகுப்பாளினியை மடக்கிய இளையராஜா..
இளையராஜா
இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல விஷயங்களை செய்யலாம் என்ற மனநிலையை உருவாக்கிவிட்டார். இதுகுறித்து தன்னுடைய கருத்தினை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்து கொண்டுள்ளார்.
AI குறித்த கேள்வியை எழுப்பிய தொகுப்பாளினியிடம், உங்களுக்கு இருக்கும் அறிவு ஆர்டிஃபிஷியலா? இல்லை நேச்சுரலா? என்று இளையராஜா கேட்க, அவர் நேச்சுரல் தான் என்று கூறினார்.

இதை கேட்ட இளையராஜா, எப்படி பிறக்கும்போதே அறிவாளியாக பிறந்துவிட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு தொகுப்பாளினி வளரவளர கற்றுக்கொள்கிறோம் என்று கூறினார்.
அதற்கு இசைஞானி, முதலில் அப்பா, அம்மா, அடுத்து வாத்தியார், அதன்பின் மற்றவர்கள் அவர்களிடமிருந்து உங்களுக்கு வந்தது தான் அறிவு தவிர உங்களுக்கான சுய அறிவு பிறக்கும்போதே இல்லை.
இப்போ இதுவே ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜெண்ட்ஸ்-ஆ இருக்கும்போது இன்னொரு ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜெண்ட் எப்படி வரும்? அதை மனிதான் தான் உருவாக்க வேண்டும். அதை ஆர்டர் செய்து ப்ரோகிராம் பண்ண வேண்டும். மனிதனின் இயக்கும் மற்றும் உணர்ச்சி இல்லாமல் இரு விஷயம் உருவாவது இல்லை, இது கனவுக்குள் கனவு போலத்தான் என்று கூறியிருக்கிறார் இளையராஜா.