போதும்யா நெல்சனை விட்டுடுங்க.. நெட்டிசன்களிடம் கெஞ்சிய முன்னணி பிரபலம்
பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன பிறகு ஒரே நாளில் இயக்குனர் நெல்சன் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர் எல்லாம் காலி. இரண்டு படம் ஹிட் கொடுத்த இயக்குநரா இப்படி ஒரு படம் எடுத்தது என வறுத்தெடுத்தார்கள் நெட்டிசன்கள். பீஸ்ட் படமும் அந்த அளவுக்கு மோசமான ட்ரோல்களை சந்தித்தது. அதிலும் குறிப்பாக கிளைமாக்சில் விஜய் ஜெட் ஓட்டும் காட்சி எல்லாம் இந்திய அளவில் ட்ரோல் செய்யப்பட்ட ஒன்று.
மூன்று மாதங்கள் ஆகியும் நெல்சன் மீதான ட்ரோல் நிற்கவில்லை. சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில், எல்லோரும் நெல்சனை தான் ட்ரோல் செய்கின்றனர். எதற்கெடுத்தாலும் என்னை ஏன்டா ட்ரோல் பண்றீங்க என இயக்குனர் நெல்சனே புலம்பி இருப்பார்.
இந்நிலையில் தற்போத நடிகர் ஆர்ஜே பாலாஜி ட்விட்டரில் 'நெல்சனை விட்டுடுங்க போதும்' என்கிற தொனியில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
Neslon is an extraordinary director..! I’ve worked with him in many shows and been a huge fan of his films..! He s one amazing talent with such an inspiring journey..! Am sure he’s gonna give us somuch happiness with his films in the future !!!❤️
— RJ Balaji (@RJ_Balaji) June 13, 2022
Lets stop this plz.??? https://t.co/tangkWGmDi