டிராகன் படம் டான் 2 கதையா? இயக்குநரை கலாய்த்த பிரதீப் ரங்கநாதன்..
டிராகன்
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.
படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் பிரதீப் நங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து, யூடியூப் பிரபலம் விஜே சித்து சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். டிராகன் படத்தில் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கானும் நடித்துள்ளனர்.
டான் 2
அந்த பேட்டியில், இயக்குநரிடம் இந்த படம் என்ன கதை என்று கேட்டுள்ளார் சித்து. அதற்கு பிரதீப் ரங்கநாதன், இது டான் 2 என்று மறைத்துவிட்டார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர் என்னிடம் கதையை சொல்லும் போது இது டான் 2 தானோ என்று எனக்கு தோன்றியதாகவும் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் ஒருவேலை டான் 2வாக தான் இருக்குமோ என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Guys Pradeep Normal ah Pesraru 😂🔥 #Dragon
— SillakiMovies (@sillakimovies) February 19, 2025
.pic.twitter.com/y86bMWMq9D