வசூல் நாயகனான பிரதீப்.. கலெக்ஷனில் மாஸ் காட்டும் டிராகன்
Pradeep Ranganathan
Box office
Dragon
By Kathick
இளம் சென்சேஷனல் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தனர்.
இப்படம் உலகளவில் 10 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்தது. இதனை படக்குழு கொண்டாடினார்கள்.
இந்த மாபெரும் வசூல் சாதனையை தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் டிராகன் திரைப்படம் 16 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 16 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 134 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடியை தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.