கண்களால் மயக்கும் டிராகன் பட கதாநாயகி!! யார் இந்த நடிகை கயாடு லோஹர்?
டிராகன்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் டிராகன். இப்படம் ரிலீஸாகி 4 நாட்களில் சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தி வருகிறது. இப்படம் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணமாக இருப்பது 3 நாயகிகள்.
அதில் பல்லவி ரோலில் நடித்துள்ள நடிகை கயாடு லோஹர் தான். டிராகன் படம் ரிலீஸாகியது முதல் இணையம் முழுவதும் கயாடு லோஹர் பற்றிய பதிவுகள்தான் அதிகம். நடிகை கயாடு லோஹர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யாடு லோஹர்
அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கயாடு, கன்னடத்தில் அறிமுகமாகி பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற மலையாளப் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் படத்தில் நடித்தார்.
தற்போது இதயம் முரளி படத்தில் முரளிக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வசீகரிக்கும் வகையான போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.








