மனைவி முன்பே நடிகருக்கு லிப்லாக் அடித்த பிரபல நடிகை!! டிரெண்ட்டாகும் வீடியோ..
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் 99வது ஆஸ்கர் விருது விழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று விழாவில் பிரபலங்கள் அணிந்து வரும் ஆடைகளும் பெரியளவில் கவனத்தை ஈர்க்கும். அதேபோல் பிரபலங்கள் ஏதாவது நிகழ்ச்சி சமயத்தில் செய்தாலும் பெரியளவில் பேசப்படும்.
ஆஸ்கர் விருது விழா
சிறந்த துணை நடிகைகளுக்கான விருது பட்டியல், சோய் சால்டானா (Emilia Pérez), மோனிகா பார்பரோ (A Complete Unknown), அரியானா கிராண்டே (Wicked), மற்றும் இசபெல்லா ரோசெல்லினி (Conclave), ஃபெலிசிட்டி ஜோன்ஸ் (The Brutalist) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே எமிலியா பெரெஸ் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை சோய் சல்டானா வென்றார்.
நடிகருக்கு லிப்லாக்
இந்நிலையில் கிங் காங் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் அட்ரியன் பிராடி, ’தி ப்ரூட்டலிஸ்ட் படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை பெற்றார். விழாவிற்கு வந்த அவர் ரெட் கார்பெட்டில் நின்ற போது கேட்வுமன் பட நடிகை ஹாலி பெர்ரி, அட்ரியன் பிராடியை பார்த்து மகிழ்ச்சியில் கட்டியணைத்தார்.
பின் இருவரும் ஆஸ்கர் விருதுவிழாவில் லிப் டு லிப் முத்தம் கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் இருவரும் லிப்லாக் செய்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
A reunion 22 years in the making. #Oscars pic.twitter.com/MkaF2xb6SE
— The Academy (@TheAcademy) March 2, 2025