அந்த பொம்பள புள்ள இஷ்டத்துக்கு பேசுது!! கடுப்பான கேப்டன் விஜயகாந்த்..

Vijayakanth Tamil Actors
By Edward Aug 02, 2025 05:30 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023ல் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரின் நினைவாக அவர் செய்த பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கேப்டன் விஜயகாந்த் குறித்து டப்பிங் கலைஞர் ராஜேந்திரன் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

அந்த பொம்பள புள்ள இஷ்டத்துக்கு பேசுது!! கடுப்பான கேப்டன் விஜயகாந்த்.. | Dubbing Artist Rajendran Shares About Vijayakanth

அதில், நானும் விஜயகாந்த்தும் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ஒரு ஃபோன் வந்தது. நான் எடுத்தேன். ஒரு பெண் என்னிடம் நான் சேம்பரிலிருந்து பேசுகிறேன், விஜயகாந்த் இருக்கிறார் என்று கேட்டதும் நானும் அவரிடம் கொடுத்தேன்.

இஷ்டத்துக்கு பேசுது

அவர் ஹலோ என்று ஸ்டைலாக கூற, உட்னே அந்த பெண்ணோ, ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிட்டார். இதனை எதிர்பார்க்காத விஜயகாந்த்தோ, ராங் நம்பர் என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார். நான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.

அந்த சமயம் ராதாரவி வந்து, நான் அவசரமாக வெளியேறியபோது அவர்மீது மோதிவிட்டேன். என்ன நடந்தது ஏன் இப்படி என ராதாரவி என்னிடம் கேட்டார். உடனே விஜயகாந்த்தோ, அவரிடம், ஏதோ ஒரு பொம்பள புள்ள இஷ்டத்துக்கு இங்கிலீஷில் பேசுது, இங்கிலீஷெல்லாம் யாருக்குப்பா தெரியும் என்று கூறினார். அந்தளவுக்கு அவர் வெள்ளந்தியான மனிதர் என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.