மிரட்டும் அளவுக்கு அப்படி என்ன போட்டோ!! ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆதரவு அளித்த நடிகை..
ஜாய் - ரங்கராஜ்
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக கூறி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமீபகாலமாக புகாரளித்து வந்துள்ளார். இதுகுறித்த விசாரணை சமீபத்தில் மகளிர் ஆணையத்தில் நடைபெற்று வரும் நிலையில், முதலில் நான் தான் தந்தை என்று தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், தன்னை மிரட்டியதால் தான் ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டேன், பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்று ரங்கராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை அறிந்த ஜாய் கிரிஸில்டா, தான் டி என் ஏ டெஸ்ட் எடுக்க தயார் என்றும் அவர் மாற்றி மாற்றி பேசுகிறார் என்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

கொற்றவை
தற்போது ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆதரவாக நடிகையும் எழுத்தாளருமான கொற்றவை ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், மிரட்டினால் காவல் துறையிடம் செல்லாமல் திருமணம் செய்து கொள்வீர்களா? மிரட்டும் அளவுக்கு அப்படி என்ன தனிப்பட்ட படங்களோ செயலோ இருந்தது. மகளிர் ஆணையத்தின் அறிவிப்பை மறுக்கும் அளவுக்கு செல்வாக்கு வியப்பாக இருக்கிறது என்ற கருத்தினை பகிர்ந்திருக்கிறார் கொற்றவை.