Dude : மேடையில் மமிதா பைஜுவின் முடியை கியூட்டாக பிடித்து இழுத்த பிரதீப்..வீடியோ
Dude
இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சாய் அபியங்கர் இசையில் நாளை அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பிரதீப் ரங்கராதன் பல இடங்களுக்கும் பேட்டிகளுக்கு சென்று வருகிறார். தற்போது ஹைதராபாத்தில் டியூட் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.
அப்போது மேடையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு, படத்தில் இருக்கும் க்யூட்டா இருக்கா என்ற டயலாக்கை ரீகிரியேட் செய்ய சொல்லி தொகுப்பாளர் கேட்டுள்ளார்.
அப்போது மமிதா பைஜுவின் கன்னத்தை பிடித்து இழுத்துள்ளார் பிரதீப். பின், பிரதீப் மமிதா பைஜுவின் தலை முடியை பிடித்து இழுத்து சென்றுள்ளார். அப்போதும் க்யூட்டா இல்ல என்று மமிதா கூறினார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனை பலர் விளையாட்டுக்கு செய்தார் என்று கூறி வந்தாலும் சிலர் விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
வீடியோ
#PradeepRanganathan and #MamithaBaiju Recreating the "Cute ah ila" Scene from #Dude Trailer..😅💥
— Laxmi Kanth (@iammoviebuff007) October 15, 2025
pic.twitter.com/dNEM4H8OYf