35 வயதில் கலைமாமணி விருது!! இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு இவ்வளவா...

Anirudh Ravichander Net worth
By Edward Oct 16, 2025 10:30 AM GMT
Report

அனிருத் ரவிச்சந்திரன்

தென்னிந்தியாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் அனிருத் ரவிச்சந்திரன். பிஸியாக வேலை செய்து வரும் அனிருத், தற்போது ஜெயிலர் 2 படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

35 வயதில் கலைமாமணி விருது!! இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு இவ்வளவா... | Music Director Kalaimaamani Anirudh 35 Birthday

3 படத்தின் மூலம் தன்னுடைய சிறிய வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத்துக்கு தற்போது 35 வயதாகிறது. சிறு வயதில் தமிழக அரசு சார்ப்பில் முதலமைச்சர் கையில் கலைமாமணி விருதினையை அனிருத் பெற்றிருக்கிறார்.

சொத்து மதிப்பு

35வது பிறந்தநாளை எட்டியுள்ள அனிருத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.  ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் அனிரூத், விளம்பரங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களுக்கும் பாடி சம்பாதித்து வருகிறார்.

35 வயதில் கலைமாமணி விருது!! இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு இவ்வளவா... | Music Director Kalaimaamani Anirudh 35 Birthday

அப்படி அவர் 35 வயதில் சேர்த்து வைத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 70 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னையில் சொகுசு பங்களா மற்றும் ஸ்டூடியோவை வைத்துள்ளார். மூன்றுக்கும் மேற்பட்ட சொகுசு கார்களும் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.