இந்த மனசு யாருக்கு வரும்! லட்ச மதிப்பிலான டிரக்கை ரசிகருக்கு பரிசாக கொடுத்து வியக்க வைத்த ராக்

hollywood rock dwaynejohnson rednotice
By Edward Nov 26, 2021 04:58 AM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் தொலைக்காட்சியில் பிடித்தமான விளையாட்டு என்றால் அது WWE தான். குத்துசண்டையில் முதல் ரேங்கில் இருந்தவர் ராக் என்கிற டிவைன் ஜான்சன். தற்போது ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ராக் சமீபத்தில் அவர் நடித்ஹ ரெட் நோட்டீஸ் படம் வெளியாகவிருக்கிறது.

எப்போது ரசிகர்களின் நலனில் அக்கரை கொண்டு உதவி வரும் ராக் சமீபத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசுகளை கொடுத்து வருகிறார். தன்னுடைய 30 லட்சம் மதிப்பிலான செல்ல டிரக்கில் வந்த ராக் தன் ரசிகர் ஒருவரான ஆஸ்கர் ரோட்ரிகஸை சந்தித்து நெகிழ்ந்துள்ளார்.

ஆஸ்கர் தன்னுடைய 72 வயதான அம்மாவை பார்த்தும் மக்களுக்கு உதவிகளை செய்தும் வருகிறார். அவரின் இந்த செயலை பாராட்டி தன்னுடைய செல்ல டிரக்கினை பரிசாக அளித்துள்ளார். உங்களுடைய மனிதநேயத்திற்கு கிடைத்த பரிசுதான் இது என்று பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.