விக்ரம் படத்துக்கு வந்த சோதனை? மாஸ்சீனை பங்கம் பண்ணிய விஜய் டிவி சீரியலை வெச்சு செய்யும் ரசிகர்கள்..
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராய் இயக்கத்தில் உருவான படம் விக்ரம். கைதி, மாஸ்டர் படங்களுக்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகளவில் வெளியாகி சூப்பர் பிளாக்பஸ்டர் படமாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தற்போது வரை 400 கோடி அளவில் வசூலை பெற்று வரும் விக்ரம் படத்தின் அனிருத் இசையமைத்த பின்னனி இசையும் மக்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. முதல் சீசனில் இருந்த கதையை அப்படி மாற்றி புதுவடியில் ஈரமான ரோஜாவே 2 என்று ஒளிப்பரப்பாகி வருகிறது. விருப்பம் இல்லாமல் கல்யாணம் செய்து கொண்டுள்ள இரு தம்பதியினருக்கு இடையில் நடக்கும் காட்சி சமீபகாலமாக மக்களை கவர்ந்து வருகிறது.
காரில் சென்றிருக்கும் ஹீரோ தன்னுடம் சண்டை போட வரும் வில்லன்களுடன் தூங்கி இருக்கும் மனைவியை டிஸ்டர்ப் செய்யாமல் இருக்குமாறு கேட்டு அவர்களை அடிக்கிறார். அதன் பின்னணி இசையை விக்ரம் படத்தில் அமைந்துள்ள once upon a time பாடலை வைத்து எடிட் செய்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு பெரிய மாஸ் சீன் பீஜிஎம்-ஐ இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே என்று பலர் திட்டியும் வருகிறார்கள். இதை பார்த்த லோகேஷ் கனகராஜே ஷாக்காகும் அளவிற்கு அந்த காட்சி அமைந்திருக்கிறது.
— Darvin Raj (@darvinrajck) June 27, 2022
மொத்தமா செதச்சிட்டானுங்க.. ???? https://t.co/uOmVzO3eL8
— கார்த்தி சமூகவாதி (@Karthi_Genelia) June 27, 2022