கள்ள உறவுல நான் கல்யாணம் பண்ணிக்கல!! எமோஷ்னலாக பேசிய இசையமைப்பாளர் டி இமான்..

Sivakarthikeyan D Imman Gossip Today
By Edward Jan 02, 2024 08:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் டி இமான், சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

முதல் மனைவி மோனிகாவுடன் விவாகரத்து செய்த போது அவருக்கு சப்போர்ட் செய்ததால் தான் சிவகார்த்திகேயனை அப்படி இமான் கூறியதாகவும் சிவகார்த்திகேயன் - மோனிகா பேசிய ஆபாச சேட்டிங் தன்னிடம் இருப்பதாகவும் பிரபல பத்திரிக்கையாளர்கள் கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் இமான் தன் இரண்டாம் கல்யாணம் பற்றிய சில தகவல்களை சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார். விவாகரத்தால் தனக்கு இசையமைப்பதில் பாதிக்கப்பட்டதால் இரு ஆண்டுகள் படம் பண்ணாமல் இருந்தேன்.

வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்கும் போது என் அப்பா வருத்தப்பட்டார். அவர் பார்த்து வைத்து திருமணம் செய்தது, இப்படியொரு சூழ்நிலையாக மாறிவிட்டதே, வேதனை வந்துவிட்டதே என்ற வலி இருந்தது. நான் எந்த தப்பும் செய்யவில்லை என்ற உணர்வு எனக்கு இல்லை.

மேலும், மகள்கள் 3 ஆண்டுகளாக என் மீது பாசமாக இல்லை. அதற்கான காரணத்தை அவர்கள் பெரியவர்களாகும் போது கூறுவேன். நான் கள்ள உறவுல கல்யாணம் பண்ணிக்கல, என் பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்.