மேடையில் தொகுப்பாளரை கன்னத்தில் அடிக்க என்ன காரணம்? வில் ஸ்மித் மனைவிக்கு இந்த நோயா?

Oscar willsmith chrisrock jadawillsmith Oscar2022
By Edward Mar 28, 2022 10:40 AM GMT
Report

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் வில் ஸ்மித். கிரைம், காமெடி,சயின்ஸ் பிக்சன் உள்ளிட்ட பல விதமான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

ஆஸ்கர் பிரச்சனை:-

வருடம் வருடம் நடைபெறும் ஆஸ்கார் விருது விழா இந்த ஆண்டு 94வது ஆஸ்கர் விருது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சி பல கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதினை கிங் ரிச்சர்ட் படத்தின் நாயகன் வில் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது.

வில் ஸ்மித் விருது வாங்குவதற்கு முன் வில் ஸ்மித்தின் மனைவி Jada Pinkett Smit அவர்களின் முடியை பற்றி கிண்டல் செய்யும் வண்ணம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக் மேடையிலேயே சிரித்தபடி பேசி வந்தார்.

இதை அமைதியாக சிரித்து கொண்டிருந்த வில் ஸ்மித் ஒரு கட்டத்தில் அமைதியை இழந்து மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் பளார் விட்டு சென்றுள்ளார். இதை அமைதியாக எடுத்துக்கொண்ட கிறிஸ் ராக் சிரிப்புடன் நிகழ்ச்சிக்கு சென்றார்.

வில் ஸ்மித் மனைவிக்கு என்ன தான் ஆச்சு:-

ஹாலிவுட் சினிமாவின் நடிகையாக விளங்கி வந்த வில் ஸ்மித்தின் மனைவி Alopecia Areata என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை முடிகள் உதிர்வது அதிகமாகியுள்ளது.

இதனை ஒப்பிட்டு மனைவி ஜடாவை கலாய்த்து பேசியதால் தான் வில் ஸ்மித் பளார் விட்டுள்ளார். இதன்பின் விருதி வாங்கியபோது ஆஸ்கர் நி்றுவனத்திடமும் சக போட்டியாளர்களிடமும் மன்னிப்பு கேட்டார். ஆனால் தொகுப்பாளரை பற்றி எதுவும் பேசாமல் இருந்துள்ளாராம்.