மரணமடைந்த பாரதிராஜா பட நடிகர்!! பாபுவை தொடர்ந்து தாயும் இறப்பு..

Bharathiraja
By Edward Oct 12, 2023 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை இயக்கி வளர்த்து விட்ட இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாரதிராஜா. அவரின் படத்தில் சில காட்சிகள் நடித்தால் போது என்று நினைப்பவர்கள் வரிசையில் என் உயிர்த் தோழன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் பாபு.

அப்படத்திற்கு சில படங்களில் நடித்தாலும் கையில் 14 படங்களை தட்டிச்சென்றார் நடிகர் பாபு.

ஆனால் மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில் நடித்து கொண்டிருந்த போது சண்டைகாட்சிக்காக மாடியில் இருந்து குதித்தபோது அவரின் முதுகு புறத்தில் அடிபட்டு சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டார்.

இதனால் அவரால் கடந்த 22 ஆண்டுகளாக எழுந்து நடமாட முடியாமல் போனது.

கடந்த சில ஆண்டுகளுக்கு தான் நடிகர் பாபு படுத்த படுக்கையாக இருப்பதை அறிந்து பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கி இருந்தார்.

நடிகர் பாபு கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் மகன் பாபு இறந்த துயரில் சில வாரத்தில் அவரது தயாரா மரணமடைந்தது அதிர்ச்சியளித்துள்ளது.