எதற்கும் துணிந்தவன் படம் பிளாப் இல்லையா? எப்படிலாம் ஓட்டினீங்களே
நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி தியேட்டரில் வெளியானபடம் எதற்கும் துணிந்தவன். பல எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. மேலும் அண்ணாத்த திரைப்படம் போல் சீரியல் என்று கலாய்த்து வந்தவர்கள் அதைவிட மோசம் என்று கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டது. சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு எடுத்த இந்த படம் தற்போது தமிழகத்தில் முதல் நாள் மட்டும் 15 கோடியே 45 லட்சமும், இரண்டாவது நாள் வசூலாக 13 கோடியே 75 லட்சமும், மூன்றாவது நாள் வசூலாக 18 கோடியே 75 லட்சமும் வசூல் செய்திருக்கிறது.
ஆக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் மட்டும் இந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 47 கோடியே 95 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது . இந்த மூன்று நாட்களுக்குள் இவ்வளவு தொகை வசூல் ஆகியுள்ளது. வசூல்லாகி என்ன பயன் படம் நல்ல இருக்கனுமே என்று பலர் கருத்துக்களை கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.