இந்தாம்மா ஏய்!! இனிமே இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாராக இருக்க முடியும்!! மறைந்த ஆதி குணசேகரன்..
சின்னத்திரையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் எதிர்நீச்சல். டிஆர்பி-யில் டாப் இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் இருக்க முக்கிய காரணமே குணசேகரன் கதாபாத்திரம் தான்.
வில்லனாக அனைவரையும் கவர்ந்திழுத்த குணச்சேகரன் ரோலில் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து நடித்து வந்துள்ளார்.
ஜெயிலர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வந்த மாரிமுத்து, ஆரம்பகாலக்கட்டத்தில் அஜித்தின் நெருங்கிய நண்பராக இருந்து பல அனுபவங்களை பகிர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் டப்பிங் பணியின் போதே இன்று மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது உண்மை என்ற தகவலும் இறுதி சடங்கில் வைக்கப்பட்ட அவரது உடலின் புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
57 வயதான மாரிமுத்துவின் இறப்பிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கலை தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.
அவருக்கு பதிலாக இனி யார் ஆதி குணசேகரனாக நடிக்க முடியும், அவரை போல் நடிக்க யாராலும் அவரது இடத்தை நிரப்ப முடியாது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.