எதிர்நீச்சல் சீரியல் நாயகி பார்வதிக்கு அடித்த ஜாக்பாட்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
எதிர்நீச்சல்
சன் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். நான் தான் கிங் என்ற எண்ணத்தில் இருக்கும் குணசேகரன் வீட்டுப் பெண்களை படாத பாடு படுத்திவிட்டார்.
இப்போது பெண்கள் அனைவரும் தைரியமாக குணசேகரனை எதிர்த்து போராடவும் ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது பெண்கள் போராடி தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடத்தி வைத்து விட்டனர்.
அடுத்து குணசேகரன் மறைத்து வைத்த ரகசியம் ஒன்று வெடிக்கப்போகிறது என்ற லீட் சில வாரங்களுக்கு முன்பே இயக்குநர் தெரிவித்துவிட்டார்.
அடித்த ஜாக்பாட்!
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியல் தொடரின் கதாநாயகி பார்வதி நடித்திருக்கும் வெப் தொடர் குறித்து தகவல் கசிந்துள்ளது.
அதாவது தற்போது ஹாட் ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வரும் வெப் தொடரான 'போலீஸ் போலீஸ்'. இந்த வெப் சீரிஸில் முரட்டு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மிர்ச்சி செந்திலின் மனைவியாக பார்வதி நடித்து வருகிறார்.
இதுவரை சீரியல் நடிகையாக இருந்த பார்வதியை, இந்த வெப் தொடர் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.