மனைவிகள் இன்றி தனியாக பூஜை போட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. வறுத்தெடுக்கும் இணைய வாசிகள்!
மாதம்பட்டி ரங்கராஜ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்நிகழ்ச்சிக்கு முன் சில படங்கள் நடித்தாலும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அதன்பின் தனக்கு தெரிந்த சமையல் தொழிலில் களமிறங்கியவர் அதில் குறைந்த நேரத்திலேயே பெரிய வெற்றியை கண்டார். எந்த ஒரு பிரபலம், அரசியல்வாதியின் திருமணம் என்றாலும் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் குழு தான் உள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துள்ளார். தற்போது இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வறுத்தெடுக்கும் இணைய வாசிகள்!
மறுபக்கம், வெளிநாடுகளிலும் தனது தொழிலை பிரபலப்படுத்தியுள்ளார். சொந்த தொழில் மூலம் பெரிய அளவில் முன்னேறிய மாதம்பட்டி ரங்கராஜ் இப்போது டெல்லியில் சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு பவனில் ஒரு புதிய கிளையை திறந்துள்ளார்.
இதில் அவரது இரண்டு மனைவிகளும் கலந்து கொள்ளவில்லை என்பதால் இணைய வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.