கண்விழித்த ஈஸ்வரியை கொலை செய்ய வந்த கும்பல், தப்பிப்பாரா?.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் பல தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் அடுத்தடுத்து பரபரப்பின் உச்சமாக, விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
குணசேகரன் தாக்கியதால் சீரியஸான நிலையில் ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது கண்விழித்த ஈஸ்வரி உண்மையை கூறிவிட்டாள் ஆதி குணசேகரன் சிறைக்கு செல்லவேண்டும் என்பதால், ஈஸ்வரியை கொலை செய்ய முடிவு செய்துவிட்டார் கதிர்வேல். அதற்காக மருத்துவமனைக்கு ஒரு கூலிப்படையை அனுப்பி வைத்துள்ளார்.
தப்பிப்பாரா?
இந்நிலையில், ஈஸ்வரியை கொலை செய்ய அந்த கும்பல் மருத்துவமனை உள்ளே வர. ஈஸ்வரியின் மகளும், மருத்துவமனையில் உள்ளவர்களும் அந்த கும்பலை உள்ளே வராமல் தடுக்க முயற்சி செய்த நிலையிலும் அந்த முயற்சி கைகூடவில்லை.
ஈஸ்வரியின் நிலை என்ன ஆகப்போகிறது, இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.