போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த பெரிய ட்விஸ்ட்...எதிர்நீச்சல் பரபரப்பு ப்ரோமோ!
Sun TV
TV Program
Ethirneechal Thodargiradhu
By Bhavya
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஒரு தொடராக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது. தற்போது ஜனனி எப்படியோ சக்தியை கண்டுபிடித்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிவிட்டார்.
ஜனனி, சக்தியை காப்பாற்ற போராடும் போது சரியான நபர் கண்ணில் பட அப்படியே சூழ்நிலை மாறிவிட்டது. நீதிபதி ஜனனி சொன்னதை கேட்டு தனி குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால் குணசேகரன் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது தெரிய வந்ததும், அண்ணன்-தம்பிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்.

பரபரப்பு ப்ரோமோ!
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் நல்லவன் கிடையாது என அவரது அம்மா போலீசிடம் உண்மையை சொல்ல ஆரம்பிக்கிறார். அதை போன் மூலமாக கேட்டுக்கொண்டிருக்கும் குணசேகரன் கடும் அதிர்ச்சி ஆகிறார். இதோ அந்த ப்ரோமோ,