பேசிய பேச்சுக்கு செம அடி வாங்கும் எதிர்நீச்சல் சீரியல், ஆதி குணசேகரனா சும்மாவா
எதிர்நீச்சல் இந்த சீரியல் தான் சில மாதங்களுக்கு முன்பு ஒட்டு மொத்த தமிழக மக்களின் பேசுபொருளாக இருந்தது. அதில் நடித்த மாரிமுத்து சமீபத்தில் இறந்தது அந்த சீரியல் ரசிகர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியது.
ஏனெனில் மாரிமுத்துவால் தான் அந்த சீரியலே செம டி ஆர் பி வந்துக்கொண்டு இருந்தது. அவர் இறப்பிற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேலா ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
வேலா ராமமூர்த்தி இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே ஒரு பேட்டியில், ஒரே நாளில் அந்த கேரக்டரை நான் என்னுடையது ஆக்கிக்கொள்வேன் என்று சவால் விட்டார்.
ஆனால், நடந்ததே வேறு, இவரை பலரும் இன்று வரை ஆதி குணசேகரனாக ஏற்கவில்லை, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் ஒரு சர்க்காஸ்டிக் இருக்கும், இவர் எப்போது கடு கடு என்றே இருக்கின்றார் என கூறி வருகின்றனர்.
இதன் காரணமாகவே எதிர்நீச்சல் டி ஆர் பி வாரத்திற்கு வாரம் தற்போது சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.