முன்னாள் காதலனுடன் அதை செய்வீர்களா? அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீதேவி மகள்..

Sridevi Janhvi Kapoor
By Edward Jul 20, 2022 05:43 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரின் மகளாக தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற கடினமாக நடித்து வருகிறார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்.

தடக் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய ஜான்வி தற்போது குட் லக் ஜெர்ரி படத்தில் நடித்து வெளியாக காத்திருக்கிறார். நடிகை நயன் தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியுள்ளது குட்லக் ஜெர்ரி.

இப்படத்தின் பிரமோசன் வேலையாக பல இடங்களுக்கு சென்று வரும் ஜான்வி அடுத்து பாவல் என்ற படத்தில் வருண் தவாணுடன் நடித்தும் வருகிறார். சமீபத்தில் நடிகை சாரா அலிகானுடன் கரன் ஜோகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் ஜான்வி கபூர்.

அப்போது முன்னாள் காதலருடன் உடலுறவு கொள்வீர்களா என்ற சர்ச்சையான கேள்வியை கேட்டிருக்கிறார் கரண் ஜோகர். என்னால் பின்னோக்கி போகமுடியாது என்று ஒத்த வார்த்தையில் பதிலளித்து ஷாக் கொடுத்திருக்கிறார் ஜான்வி.

மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் டேட் செய்ய சாரா அலிகான் ஆசைப்படுவதாக கூறியதற்கு ஜான்வி அதிர்ச்சியான ரியாக்ஷன் கொடுத்தது வைரலானது.