அப்பா செத்திருக்கலாம் என கூறும் மகள்கள்! இரண்டாம் திருமணத்தால் வெறுப்பேற்றும் மாஜி மனைவி..

Tamil Cinema D Imman
By Edward May 20, 2022 10:10 AM GMT
Report
165 Shares

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக பணியாற்றி மக்களிடம் தன் இசையால் ஈர்த்துவருபவர் டி இமான். கடந்த சில மாதங்களுக்கு முன் இரு மகள்கள் இருக்கும் நிலையில் மனைவி மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார்.

இதனை சமீபத்தில் தான் அறிக்கை மூலம் அறிவித்தார். இதை தெரிவித்த சில மாதங்களில் டி இமான் எமிலி என்பவரை சில நாட்களுக்கு முன் இரண்டாம் திருமணம் செய்துள்ளார். மனைவியின் மகளையும் தன் குழந்தையாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதுதான் என்னுடைய மூன்றாவது மகள் என்று இணையத்தில் திருமண புகைப்படத்தோடு தகவலை கூறினார். இதனால் கடுப்பாகிய முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட், 12 வருடங்களாக உன்னுடன் வாழ்ந்தேன் பாரு நான் ஒரு முட்டாள் என்றும் என் குழந்தைகளை அப்பா ஸ்தானத்தில் எப்படியாவது பாதுகாப்பேன்.

தேவைப்பாட்டாள் உன்னுடைய புதிய குழந்தையையும் பாதுகாப்பேன் என்று தெரிவித்தார். மேலும் இமான் மகள்களின் பாஸ்போர்ட் விவகாரமாக மோனிகா மீது வழக்கு தொடுத்தார்.

இதற்கு பதிலளித்த மோனிகா இரண்டு ஆண்டுகளாக நீ பெத்த மகள்களை பார்க்கவோ கவனித்துக்கொள்ளவோ இல்லை. இதனால் நீ செத்திருக்கலாம் என்றே மகள்கள் கூறியுள்ளார் என்று கூறியுள்ளார். நீ நடிக்கவே சென்றிருக்கலாம் என்று வெறுப்பேற்றும் வகையில் இணையத்தில் பதிவினை போட்டுள்ளார்.

Gallery