பகத் பாசில் வைத்திருக்கும் கார் கலெக்ஷன்ஸ்!! மொத்தம் இத்தனை கோடியா?
பகத் பாசில்
மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் பகத் பாசில்.
தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோவாக வலம் வந்த இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து, பகத் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன், ரஜினியுடன் இணைந்து வேட்டையன் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
கார் கலெக்ஷன்ஸ்
கார் பிரியரான பகத்பாசில் ஏற்கனவே லம்போர்கினி உருஸ் ரூ. 3.15 கோடி, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏ.எம்.ஜி ரூ. 4 கோடி, ரேன்ஞ் ரோவர் ஆட்டோ பயோகிராப்பி ரூ. 4 கோடி, லேண்ட்ரோவர் டிபண்டர் ரூ. 2.12 கோடி, போர்ச்சே 911 ரூ.1.8 கோடி, டொயோட்டா வெல்பைர் லக்ஸஸ் எல் எம் 350எச் ரூ. 2.6 கோடி, மினி கண்ட்ரி மேன் ரூ. 49 லட்சம், வோக்ஸ் வேகன் கோல்ஃப் ஜிடிஐ ரூ.53 லட்சம், Mercedes-Benz E63 AMG ரூ. 1.77 கோடி போன்ற ஆடம்பர வசதிகளுடன் கூடிய கார்கள் உள்ளன.
இத்தனை கோடியா
சமீபத்தில் 13.75 கோடி ரூபா மதிப்புள்ள பெரெரி காரை வாங்கியுள்ளார். இதன் புகைப்படங்களை சேர்த்து பகத் பாசில் வாங்கியுள்ள கார் கலெக்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தனை கார்களின் மதிப்பு சுமார் ரூ. 45 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.









