என்ன ரங்கா நியாயமா இது? மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டுமா!
தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. சமீபத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் வரவழத்து வகுப்புகள் ஆரம்பித்ததை ஆய்வு செய்த வீடியோக்கள் வைரலானது.
சமீபத்தில், தனியார் பள்ளியின் கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து இரு மாணவர்கள் உயிரிழ்ந்ததால் பள்ளிகளின் கட்டிடங்களையும் ஆய்வு செய்து வருகிறார் அன்பில் மகேஷ்.
இதை தொடர்ந்து பிரபல பத்திரிக்கை ஊடகத்தின் செய்தி பக்கத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாக செய்திகள் பரவியது.
இந்த செய்தியை கேட்டு இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்த நிலையில் குறித்த ஊடகத்தினர் போலியான செய்தி என்று கூறி இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர். சிலர் கலாய்க்கும் விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
#FakeNews pic.twitter.com/h5YNVamnAH
— Thanthi TV (@ThanthiTV) December 21, 2021