சமந்தாவின் பேமிலிபேன் படம் அப்படிபட்டதா? இலங்கை தமிழர்களின் கருத்து இதுதானா!!..

samantha srilankan review thefamilyman2 familyman2
By Edward Jun 13, 2021 10:20 AM GMT
Edward

Edward

Report

நடிகை சமந்தா, மனோஜ் பாஜ்பேய், பிரியாமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் தி பேமிலி மேன் 2 சீரிஸ். படத்தின் டிரைலர் வெளியான அடுத்த நிமிடமே பல எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தனர். இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்து காட்டியது தான் அதற்கான காரணம்.

பல பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் தமிழ் ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் இப்படத்தினை வெளியிட தடை கோரி மத்திய அரசிடம் முன் வைத்தனர். அதை மீறி படம் கடந்த வாரம் வெளியானது. சமந்தாவின் சில காட்சிகள் உள்ளிட்ட தமிழ் ஈழ விடுதலைப்போர் தொடர்பான காட்சிகளும் இப்படத்தில் இருந்துள்ளது.

இலங்கை தமிழர்கள் இப்படத்தினை பற்றி கூறிய எதிர்ப்பு மற்றும் ஆதரவு விமர்சனங்கள் :-

1. பேமிலி மேன் வெப் சீரிஸ் முற்றிலும் ஒரு அற்புதமான புனைகதை திரில்லர் படம். ஆனால் சீரியலில் சில காட்சி பகுதிகள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். சர்வதேச விவகாரட்ங்களில் நிபுணத்துவம் பெற்ற ஸ்ரீ இலங்கை தமிழரான ஐ எஸ் குமாரன் கருத்துப்படியாக இருக்கிறது இந்த புனைகதை படைப்பு.

2. உளவு - திரில்லர் மையப்படுத்தியதால் தடை செய்யும் அளவிற்கு மோசமாக எதுவுமில்லை. இந்த தொடருக்கு இலங்கையில் பெரிதளவான எதிர்ப்புகளும், பெரும்பாலான இலங்கை தமிழர்களுக்கு இந்தத் தொடர் பற்றித் தெரியவில்லை.

3. ராஜி (சமந்தா) என்ற கதாபாத்திரத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட கொடூரமான கொடுமைகளைப் பற்றி பேசுகிறது; இலங்கை அரசாங்கத்தையும், போரைப் பற்றிய ராணுவத்தின் எண்ணப்போக்கையும் அம்பலப்படுத்துகிறது. மேலும், மத்திய-மாநில அரசினர் இந்தியாவில் எவ்வாறு செயல்படுகிறது என்றும், புவி சார்புடைய அரசியல் நாடகம் பற்றியும் விவாதிக்கிறது இப்படம்.

இலங்கை அரசு மற்றும் தமிழக அரசு தங்களது சொந்த நோக்கங்களை பூர்த்தி செய்ய விளையாடிய அரசியல் விளையாட்டுகளை இந்தத் தொடர் சித்தரிக்கிறது. பாகிஸ்தானுடன் ராஜி (சமந்தா) தொடர்பு வைத்திருப்பதாக காட்சிகள் இருந்துள்ளது. அதுவும் ராணுவ சீருடையை அணிந்தபடி.

4. இலங்கை போர் மற்றும் சுதந்திரப்போராட்டம் குறித்து குறைவாகவோ, அவமதிக்கவோ இல்லை. துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை இனத்தின் போராட்டத்தை இந்தத் தொடர் காட்டுகிறது.

5. கிளர்ச்சியாளர்கலை பயங்கரவாதி என்று குறிப்பிடாமல், போரளிகள் என்று அழைத்துள்ளனர்.

6. கொல்லப்பட்ட LTTE தலைவர் பிரபாகரனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதத்தில் அவருக்கு திருப்தியில்லை. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து போராடி விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரபாகரனின் தலைமையையும் அதிகாரத்தையும் இன்னும் சிறப்பாக காட்டியிருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

7. எல்.டி.டி.இ பெண்கள் பிரிவு (LTTE women cadre) மிகுந்த திறன் வாய்ந்ததாக இருந்தது. அதை தொடர் சரியாக சித்தரித்திருப்பதாக அவர் கூறுகிறார். பெண் விடுதலைப் புலிகள், தங்கள் சுய மரியாதையை உயர்த்திக் கொண்டார்கள்.

8. மேலும் போராளிகளின் தலைவர் வெளிநாட்டிற்கு தப்பிப் போய் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவராக காட்டியுள்ளது எப்படி என்பது புரியவில்லை என்று கூறியுள்ளார் ஒரு இலங்கை தமிழர்.

9. ராஜீவ் காந்தியின் படுகொலை தற்கொலை வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டது) போன்ற காட்சிகள், விடுதலைப் புலிகளை நினைவுபடுத்துகிறது. இப்படி பல இலங்கை தமிழர்கள் பிரபல ஜீ இந்துஸ்தான் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து தி பேமிலி மேன் 2 சீரிஸ் பற்றி கூறியுள்ளனர்.